சிம்பு இசையில் காதல் தேவதை எழுதிய வைரமுத்து

vairamuthu-writes-a-song-in-silambarasan-music

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்ல இருக்கிறார் சிம்பு. அந்தப் படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இடையில் வந்தது இசையமைப்பாளர் வாய்ப்பு


Advertisement

சக்கப் போடு போடு ராஜா என்ற படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். அதில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். சிம்பு நடித்த படத்தில் இதுவரையில் வைரமுத்து ஒரு பாடல் கூட எழுதியதில்லை. தற்போது அவரது இசைக்கு வைரமுத்து காதல் தேவதை என்ற பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலைப் பாடியுள்ளவர் யுவன்.சந்தானம், வைபவ் சாண்டில்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை வி.டி.வி கணேஷ் தயாரித்து வருகிறார். பிரதான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்ட படக்குழு, தற்போது பாடல்களை படமாக்க திட்டமிட்டு வருகிறது.

பாடல் முழுவதையும் முடித்துக் கொடுத்து விட்ட சிம்பு தாய்லாந்து சென்று திரும்பியதும் படத்தின் பின்னணி இசையில் கவனம் செலுத்துவார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement