வெள்ளம்புத்தூர் கொடூரம்: குற்றவாளியை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறுவன் சமயன் கொலைவழக்கில் சிறையில் இருந்த தில்லைநாதனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஆராயி குடும்பத்தின் மீது நள்ளிரவில் கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் ஆராயின் மகன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஆராயி மற்றும் அவரது 14வயது மகள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆராயின் 14வயது மகள் ஆடைகள் விலகிய நிலையில் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். இதனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் உள்ள தில்லைநாதனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்த விசாரித்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement