துரோகத்துக்கு துணைபோன அதிமுகவின் உண்மை முகம், அவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டுள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர், மத்திய அரசை கண்டித்து பேச துணிவில்லாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்தது கீழ்த்தரமான அரசியல். மக்கள் மன்றத்தில் அதிமுகவின் முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். துரோகத்திற்கு துணை போன அதிமுகவின் உண்மை முகம் அவர்களின் உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டது. மத்திய அரசை கண்டிக்காமல் திமுக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சிப்பது கீழ்த்தரமான அரசியல். தங்களின் துரோகத்தையும்,இயலாமையையும் மறைக்க அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். மக்கள் மன்றத்தில் அதிமுகவின் முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் எங்கும் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தை வேர்க்கடலை, மோர், சமோசா என நொறுக்குத் தீனியுடன் அதிமுக தொண்டர்கள் கொண்டாடினர். அத்தோடு உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் என பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் குஷியாக காணப்பட்டனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியது. இதனிடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் லஞ்ச் பிரேக் செல்கிறோம் என சொல்விட்டு சாப்பாட்டு நேரம் வந்ததும் தொண்டர்கள் கிளம்பிவிட்டனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!