யுவன் சங்கர் ராஜாவின் கார் திருட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கார் திருடப்பட்டுவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவரும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா விலையுயர்ந்த காரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கார் திருடப்பட்டு விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், ஓட்டுநர் நவாஸ்கான் காரை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement