இன்கிரெடிபிள் இந்தியா பட்டியலில் ஆதியோகி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயரம் கொண்ட  ஆதியோகி சிவன் சிலையை இன்கிரெடிபிள் இந்தியா சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


Advertisement

கோவை மாவட்டம் பூண்டி அருகே ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட 112 அடி பிரமாண்ட ஆதியோகி சிவன் சிலை கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலை என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இந்த சிலை இடம்பெற்று உள்ளது. இந்த சிலையை அதிகாரப்பூர்வ சுற்றுலாத் தளமாக மத்திய சுற்றுலாத் துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது . இந்நிலையில்  தற்போது இன்கிரெடிபிள் இந்தியா எனப்படும் வியக்கத்தக்க இந்திய சுற்றுலா தளங்களின் பட்டியலில் இந்த சிலை சேர்க்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் ஆதி யோகி சிலையை காண அதிகரித்து வருகிறது. இதனால் தற்போதைய இந்த அறிவிப்பின் காரணமாக மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

loading...

Advertisement

Advertisement

Advertisement