[X] Close >

போலியாக வங்கிக் கிளை: பொதுமக்களே உஷார்!

Man-arrested-for-running-a-fake-Karnataka-Bank-branch-in-Ballia-s-Mulayam-Nagar

உத்தரப்பிரதேசத்தில் போலி வங்கிக் கிளை நடத்தி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

வங்கிகளில் கடன் வாங்கி மோசடி என்ற பரபரப்பு செய்திகள் அடங்கும் முன்பே, ஒருவர் போலி வங்கிக் கிளை நடத்தி மோசடி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா பகுதியில் உள்ள முலாயம் நகரில், கர்நாடக வங்கியின் பெயரில் போலியாக வங்கிக் கிளை ஒன்று செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி மற்றும் வாரணாசியிலிருந்து வந்த அசல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். வங்கி கிளை நடத்தியதாக வினோத்குமார் காம்ளே என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியிலிருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம், கணினிகள், வங்கி சலான்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வங்கியில் 15பேர் கணக்குகளை துவங்கியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close