பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராபால் (RABAUL) நகருக்கு அருகில் நியூ பிரிட்டன் தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அலைகள் வழக்கத்தை விட சுமார் ஒரு மீட்டர் வரை அதிகமாக மேலெழும்ப வாய்ப்புள்ளதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதனை அடுத்து பப்புவா நியூ கினியா மற்றும் சாலமோன் தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை