15 நிமிட நடனத்துக்கு ரூ.6 கோடி: அந்த காஸ்ட்லி ஹீரோ ரன்வீர் இல்லையாம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடுவது ரன்வீர் அல்ல, வருண் தவான் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் தொடக்கவிழா நிகழ்ச்சி எப்பொழுதும் பிரம்மாண்டமாக இருக்கும். திரைப்பட நட்சத்திரங்களின் நடனங்கள் அதில் இருக்கும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கவிழாவில் நடிகை எமி ஜாக்சன் நடனமாடினார். இந்நிலையில் இந்த வருடம் எந்த நட்சத்திரம் நடனமாடப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ரன்வீர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடனமாட உள்ளதாகவும், 15 நிமிடங்கள் அவர் ஆடும் நடனத்திற்கு ரூ.5 கோடி கேட்பதாகவும், ஐபிஎல் நிர்வாகமும் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. 15 நிமிடங்களுக்கு ரூ.5 கோடி சம்பளமா என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


Advertisement

இந்நிலையில், ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடுவது ரன்வீர் சிங் அல்ல, வருண் தவான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வருண் தவான் பாலிவுட் சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோவாக இருந்து வருகிறார். வருண் தனது படங்களில் சிறப்பான நடனங்களுக்கு பெயர் பெற்றவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement