ரசிகர்களை சந்தித்த அஜித்: வைரலான புகைப்படம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


Advertisement


பல வருடங்களாகவே தலைமறைவு வாழ்க்கையை நடத்தி வருகிறார் ‘தல’. அவரை சந்திக்க வேண்டும். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். ஒரு ரசிகர் என்பதை மீறி பொது மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் அஜித். ஆகவே அவரை விரும்புபவர்கள் அதிகம். அவர் சமீபத்தில் ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ மாணவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவர்கள் அஜித்தை சந்திப்பதற்காக 12 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்திக்கிறார்கள். அதன் பின்பே அஜித் வெளியே வந்துள்ளார். அதன் பின் உற்சாகத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த அனுபவம் பற்றி மாணவர் ப்ரித்விராஜ், “சார் நாங்க உங்களை பார்பதற்காக 12 மணி நேரமா காத்திருக்கோம் என்று நாங்கள் கூறினோம். அதற்கு அஜித், ‘சாரி பா.. நான் உங்களை பார்ப்பதற்காக 26 வருடங்களாக காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அவரது ‘தெம்பான’ பதிலை கேட்டு அவர்கள் உற்சாகம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement