JUST IN

Advertisement

கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பு: சிக்கலாகும் காவிரி மேலாண்மை வாரியம்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.


Advertisement

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் இன்று காலை 11மணிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார். கர்நாடக தேர்தல் தேதி அறிவிப்பால் காவிரி வாரியம் அல்லது ஏதேனும் அமைப்பு அமைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானால் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும். எனவே தேர்தல் விதிமுறை அமலானால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை வைத்து கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை தள்ளிப்போடும் முயற்சியில் ஈடுபடும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement