பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், கேப்டன் பொறுப்பில் இருந்து கழட்டிவிடபட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கபட்டுள்ளார். பதிலாக, விரைவில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் ராஹானே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதோடு இது அணியில் முக்கிய வீரர்களுக்கும் தெரியும் எனவும் கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் அஸ்திரேலிய பிரதமர் வரை தலையிட கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இதனால் நெருகடிக்கு உள்ளானது அணி நிர்வாகம். இதனையடுத்து கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த விவகாரம்குறித்து விசாரித்த ஐசிசி, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஸ்மித் விலகியுள்ளார். இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ‘ ஸ்மித்துக்கு பதிலாக ரஹானே கேப்டனாகச் செயல்படுவார் என்றும், எந்தவொரு தனி மனிதரை விடவும் கிரிக்கெட் விளையாட்டே பெரியது. இந்தக் கருத்தை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்