நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் கோவன்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வில்வனம்புதுர் அருகில் செயல்படாத கல்குவாரிகள் பல உள்ளன. கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள், அங்குள்ள கல்குவாரிகளில் கழிவுகளை கொட்டி விட்டுச்செல்வதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தாங்கள் ஏலம் எடுத்த கல்குவாரிகளில்கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி மிகப்பெரிய சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால்அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களான , வில்வனம்புதூர் , தங்கையம்,கன்னத்திகுளம், சித்தூர் சீயோன்மலை,கண்ணநல்லுர் ஆகிய பகுதிகளில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இக்கிராமங்களை சுற்றி பல ஏக்கர் விவசாய நிலங்களும் மேய்ச்சல் நிலங்கள் இக்கல்குவாரிகளை சுற்றியே உள்ளன. இதனால் இவை அனைத்துமே பாழாகிபோகும் சூழ்நிலை உருவாகி உள்ளது .
இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டுவது மட்டுமல்லாமல் தீ வைத்து விடுவதால் வில்வவனம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புகையினால் மூச்சு திணறல் ஏற்படுவதாவும் கூறப்படுகிறது. அருகில் உள்ள நீர் நிலைகளும் மாசு அடைந்து வருவதாவும் இதனால் ஆடு மாடுகள் நோய் வாய்ப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆகவே சுற்று சூழல் அதிகாரிகள் ,மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் மருத்துவ கழிவுகளை அழித்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து மருந்துகழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சேரன்மகாதேவி சப் கலெக்டர் ஆகாஷ் , ராதாபுரம் தாசில்தார் ஆகியோர் மக்கள் கொடுத்த புகாரில் கல்குவாரிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது ?, யார் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டது என்பது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் அதன்பிறகு கழிவுகளை அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் மருத்துவக் கழிவுகளை மண்ணை கொண்டு மூடும் பணியில் அரசுப் பணியாளார்கள் ஈடுபடுள்ளனர். இதனால் மண் வளம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், முறையாக அகற்றப்படாவிட்டால் விவசாயமும் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தகவல் - காமராஜ், ராஜூ கிருஷ்ணா , புதிய தலைமுறை நெல்லை செய்தியாளர்கள்
Loading More post
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்
கங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே!
காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும்
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’