கூட்டணியில் இருந்து விலகியது ஒருதலைப்பட்சமானது - அமித் ஷா கடிதம்

TDP---s-decision-to-quit-NDA-over----unfortunate--unilateral-----Amit-Shah-writes-to-Naidu

பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது துரதிஷ்டவசமானது, ஒருதலைப்பட்சமானது என்று ஆந்திரம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

ஆந்திரம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாகக் கூறி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்கு தேசக் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. இதனையடுத்து பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரவுள்ளது.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் " ஆந்திரம் மாநில மக்கள் மீது பாஜக அரசு மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளது. மாநில நலன் மீது பாஜக அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என உங்கள் கட்சி கூறுவது பொய் மற்றும் அடிப்படை ஆதாரமில்லாதது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து விலகுகிறது என தெரிந்தவுடன் பயந்தேன். மாநில வளர்ச்சி பிரதானமாக இல்லாமல் அரசியல் சூழ்நிலையால் தெலுங்கு தேசம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிகிறேன்" என எட்டு பக்க கடிதத்தில் அமித் ஷா கூறியுள்ளார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement