JUST IN

Advertisement

இனிமே இங்கிலீஷ்ல பேசுவியா? உயிர் நண்பனை 54 முறை குத்திக் கொன்ற தோழன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆங்கிலத்தில் பேச வேண்டாம் என்று கூறியும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பனை 54 முறை குத்திக் கொன்ற நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர். 


Advertisement

மும்பை சாஹூ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் வந்தார். பதற்றமாக இருந்த அவர், ‘நான் என் நண்பனை குத்திக்கொன்னுட்டேன், என்னை கைது பண்ணுங்க’ என்றார். போலீசார் அதிர்ச்சி அடைந்து, அவரை உட்கார வைத்து விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
என் பெயர் அமிர் அப்துல் வாகித் ரஹின் (21). மாஹிம்ல வசிக்கிறேன். நான் அதிகமா படிக்கலை. என் நண்பன் ஷேக் (18). நானும் அவனும்தான் அடிக்கடி வெளியில சுற்றுவோம். எங்கிட்ட அவன் அடிக்கடி இங்கிலீஷ்ல பேசிட்டே இருப்பான். எனக்கு கோபம் வரும். ’எனக்கு இங்கிலீஷ் தெரியாது, பேசாதே’ன்னு சொல்வேன். கேட்கமாட்டேன். நான் படிக்காதவன்கிறதைக் கிண்டல் பண்ற மாதிரி பேசிட்டே இருப்பான். சொல்லிச் சொல்லிப் பார்த்தும் கேட்காததால, கோபம் வந்தது. ஒரு கட்டத்துல கோபம் வெறியா மாறுச்சு. அவன் இங்கிலீஷ்ல பேசப்பேச எனக்கு டென்ஷன் ஏறிட்டே இருக்கும். அதனால அவனைத் தீர்த்துக் கட்ட முடிவு பண்ணினேன். சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தேன்.


Advertisement

புதன்கிழமை, ராத்திரி, ‘வா தண்ணியடிக்கலாம்’னு சொன்னேன். சரின்னு வந்தான். வழக்கமா போற, பாருக்கு போனோம். பீர் குடிச்சோம். கொஞ்சம் போதையாயிட்டோம். நள்ளிரவுல ஷேக், கழிவறை போனான். அவனுக்கு தெரியாம பின்னாலயே போயி, இழுத்துப் பிடிச்சு மறைச்சு வச்சிருந்த கத்தியால, கழுத்தை அறுத்தேன். அவர் பொத்துன்னு ரத்த வெள்ளத்துல விழுந்து துடிச்சான். உடனே கழுத்து, நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகள்ல 54 தடவை குத்திக்கொன்னேன். என் ஆத்திரம் தீரும் வரை குத்தினேன். அவன் செத்துட்டதை கன்பர்ம் பண்ணிட்டு, நேரா வந்துட்டேன்’ என்றான்.

இதையடுத்து போலீசார், அவன் சொன்ன இடத்துக்குச் சென்று ஷேக்கை பார்த்தனர். அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஷேக்கின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஹினை கைது விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement