ஐபிஎல் தொடக்க விழா: 6 கேப்டன்கள் மிஸ்சிங்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்த வருட ஐபிஎல் தொடக்க விழாவில் அனைத்து கேப்டன்களும் ஒன்றாக மேடையில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.


Advertisement

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி மே மாதம் 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், தோனி (சென்னை), ரோகித் சர்மா (மும்பை) விராத் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ்), ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான் ராயல்ஸ்), காம்பீர் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), அஸ்வின் (பஞ்சாப்), டேவிட் வார்னர் (சன் ரைசர்ஸ்) ஆகிய கேப்டன்கள் தலைமையிலான எட்டு அணிகள் பங்கேற்கின்றன. 


Advertisement

முதல் போட்டியில், இரண்டு வருடத்துக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. வழக்கமாக தொடக்க விழா போட்டியில், 8 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக விழா மேடையில் பங்கேற்பது வழக்கம். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. தொடக்க விழாவில், முதல் ஆட்டத்தில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.


தொடக்க விழா முடிந்த மறுநாளே 2 லீக் ஆட்டங்கள் இருப்பதால், அணிகளின் கேப்டன்கள் உடனடியாக போட்டி நடைபெறும் இடங்களுக்குத் திரும்புவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 6 ஆம் தேதியே 8 அணிகளின் கேப்டன்கள் ஒன்றாகச் சேர்ந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தொடக்க விழாவில் திரையிடப்படும். 

loading...

Advertisement

Advertisement

Advertisement