தீக்குளிக்க முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேனி எஸ்பி உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கூறியுள்ளார்.


Advertisement

‘இடமாற்றத்திற்கு தவறும், ஒழுங்கின்மையும் தான் அடிப்படை, சாதி ரீதியான பாகுபாடு அல்ல. இருவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார். சென்னை டிஜிபி அலுலகம் முன் கணேஷ், ரகு என்ற இரண்டு ஆயுதப்படை காவலர்கள் தீக்குளிக்க முயன்றனர். ஜாதி ரீதியாக பாகுபாட்டின் அடிப்படையில் தங்களை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சித்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

இந்த சம்பவம் குறித்து எஸ்பி பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவலர் கணேஷ் சிறைக்கைதியை ஆஜர்ப்படுத்தும் போது கைதியிடம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அப்போது, சிறைக்காவலர் அளித்த புகாரின் பேரில் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், கம்பத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீருடையுடன் கலந்து கொண்டு மக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்டார். அதன் மீதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பணி நியமனம் செய்யும் போதும், உயர் அதிகாரிகள் சிரமப்படும் வகையில் சென்றுவிடுவார். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 


Advertisement

அதேபோல், காவலர் ரகு அவசர காலங்களில் பணிக்கு அழைக்கும் போது போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவார். காவலர் குடியிருப்பிலும் இருக்கமாட்டார். இவரும் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த இரண்டு காவலர்கள் மீது வந்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ளும் பொருட்டு இவர்கள் இருவருடன் சேர்த்தும் மொத்தம் 4 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றத்தை ஏற்க மறுத்து காவலர்கள் கணேஷ், ரகு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் அதிகாரிகளை மிரட்டும் வகையில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்” என்று கூறினார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement