தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி அந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சங்கீதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை " எங்க வீட்டு மாப்பிள்ளை " என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா, 18 இளம் பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி உள்ளது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. அதோடு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா தேர்வு, நீக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்.
இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் சமத்துவம் மீறப்பட்டுள்ளது. பெண்களை காட்சிப்பொருளாக இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கின்றனர். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் தவறான கருத்தை புகுத்தும் வகையில் உள்ளது. இவை தொடர அனுமதித்தால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரும், எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?