தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கவுள்ளது.


Advertisement

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. அன்று நடப்பாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அன்று மாலையே பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்ட பின், பட்ஜெட் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடவுள்ளது.

வரும் 21 ஆம் தேதி வரை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான 22 ஆம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகிறார். அத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement