ஆஸ்கர் தலைவர் மீது பாலியல் புகார்: ஹாலிவுட் அதிர்ச்சி!

Academy-President-accused-of-sexual-harassment

ஆஸ்கர் விருது அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது குவியும் பாலியல் புகார்களால் ஹாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது.


Advertisement

ஹாலிவுட்டில் பாலியல் புகார்கள் கூறுவது புதிதான விஷயமல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன், டைரக்டர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கூறினர். இதில் ஏஞ்சலினா ஜோலி உட்பட முன்னணி நடிகைகளும் அடங்குவர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் பல நடிகைகள் தங்களுடன் நடிக்கும் நடிகர்கள் மீது அவ்வப்போது பாலியல் புகார் கூறி வருகின்றனர். இதற்காக மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் திரைப்படத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது விழா நடந்து முடிந்துள்ள சில வாரங்களிலேயே மேலும் ஒரு பாலியல் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (Academy of motion pictures ) அமைப்பின் தலைவராக இருக்கும் ஜான் பெய்லி மீது.

75 வயதான ஜான் பெய்லி, ’அமெரிக்கன் ஜிகோலோ’, ‘த பிக் ஜில்’, ‘கிரவுண்ட் ஹாக் டே’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் ஆஸ்கர் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 3 பெண்கள், இவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அமைப்பு ரீதியான விசாரனை நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னர் நிர்வாகக் குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆஸ்கர் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஜான் பெய்லி மீதான பாலியல் புகார் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement