விரைவில் ஹைதராபாத்தில் ‘இந்தியன்2’ ஷூட்டிங் ஆரம்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘இந்தியன் 2’ ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’.  இந்தப் படம் நாட்டில் புரையோடிப் போய் உள்ள ஊழலை பற்றி விமர்சித்தது. ஆகவே அந்தப் படம் வியாபார ரீதியாக பெரும் வெற்றியை அடைந்தது. அதில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா உள்ளிட்ட பல நடித்திருந்தனர். கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார். அதில் இந்தியன் தாத்தாவாக வந்த கமலுக்கு இன்று வரை பலர் ரசிகர்களாக உள்ளனர். அதே போல் சுகன்யா வயதான தோற்றத்தில் நடித்து தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்திருந்தார். ‘பச்சைக்கிளிகள் தோலோடு’ போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 

இந்நிலையில்தான் ஷங்கர் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். அதற்கான அறிவிப்பை ஜனவரி 26 அன்று தைவானில் இருந்து ஹைட்ரஜன் பலூனை வானில் செலுத்து உற்சாகமாக அறிவித்தார். அரசியல் அரங்கில் கமல்ஹாசன் ஊழலை எதிர்த்து களமாடி வரும் தருணத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருவதால் அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதை உணர்ந்த ஷங்கர் ரஜினியின் ‘2.0’ வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையிலேயே அதன் இரண்டாம் பாகத்திற்காக ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டதாக தெரிகிறது. விரைவில் இந்தப் படக்குழு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப் பிடிப்பைத் தொடங்க உள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.


Advertisement


 

loading...

Advertisement

Advertisement

Advertisement