விபச்சார தடுப்புப் பிரிவு காவலர் எனக் கூறி நகை பறிப்பு: 3 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அடுத்த மதுரவாயலில் விபச்சார தடுப்புப் பிரிவுக் காவலர்கள் எனக் கூறி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற பெண் உள்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த சுந்தரவல்லி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சுந்தரவல்லிக்கும், பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய தீனதயாளனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைப் பயன்படுத்தி கொண்ட தீனதயாளன், சுந்தரவல்லி வீட்டில் இருக்கும்போது தனது நண்பர்களை காவலர்களாக வரவழைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை பறிக்க திட்டமிட்டார்.

அதன்படி தீனதயாளன், சுந்தரவல்லியின் வீட்டில் இருந்தபோது விபச்சாரத் தடுப்பு பிரிவு காவலர் எனக்கூறி 12 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். மேலும் அவரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து சுந்தவல்லி மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை கொடுத்த ஆலோசனைப்படி சுந்தரவல்லி செயல்பட்டதை அடுத்து தீனதயாளனின் நண்பர்களான நந்தினி என்ற பெண் உள்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தீனதயாளன், ஏழுமலை இருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement