பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி துணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி துணி அணிவிப்பு இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை.


Advertisement

நாமக்கல் பிரதான சாலையில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெரு சந்திப்பில் அதிமுக சார்பில் 1984-ம் ஆண்டு பெரியார் சிலையும், 1993-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிலையும், 1994-ம் ஆண்டு அண்ணா சிலையும் மார்பளவில் அமைக்கப்பட்டது. இச்சிலைகளை நாமக்கல் நகர அதிமுகவினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் கழுத்து பகுதியில் பொன்னாடை போல் காவி நிற துணியை அணிவித்து மலர் மாலையும் அணிவித்துள்ளனர். சிலைகளுக்கு காவி துணிகளை அணிவித்தவர்கள் யார் என்பது குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அத்துணிகளை அகற்றினர். இதனை அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement