மேடைக்கு வந்தார் டிடிவி: 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேலூரில் டிடிவி தினகரன் புதிய கட்சி மற்றும் கொடியை இன்று அறிவிக்க உள்ளதையொட்டி ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.


Advertisement

மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் இன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியினை அறிமுகம் செய்ய உள்ளார். மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில் இதற்கான மேடை மற்றும் கொடி ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்காக 60-க்கு 40 வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டும், 50 ஆயிரம் தொண்டர்கள் அமரும் வகையில் தகர பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய கட்சிக் கொடி ஏற்றுவதற்க்காக 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பமும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பம் நிரந்தரமாக இங்கு இருக்கும் நோக்கில் கொடிகம்பம் நிறுவப்பட்டுள்ள 3 சென்ட் இடமும் மேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான ஆர்.சாமி பெயரில் பதியப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்திற்கான புதிய கட்சி அலுவலகமும், கொடிகம்பம் நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு அருகே உள்ள 3 மாடி அடுக்கு குடியிருப்பின் மேல் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.


Advertisement

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற டிடிவி தினகரன் வாகனம் மூலம் தஞ்சை வந்தார். இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை மதுரை வந்த அவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். மதுரை மேலூரில் தனது கட்சி தொடக்க விழா நடக்கும் மேடைக்கு சற்றுமுன் டிடிவி தினகரன் வருகை புரிந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு தொண்டர்கள் மேலூருக்கு வந்துள்ளதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement