[X] Close >

100 ஆண்டுகளுக்கு பின்... வங்கக்கடலில் மார்ச்சில் காற்றழுத்த தாழ்வுமண்டலம்

a-depression-on-bay-of-Bengal-in-march-after-100-years

தமிழகத்தில் பல பகுதிகளிலும் நேற்று மாலை மற்றும் இரவு நல்ல மழை பெய்துள்ளது. இதற்கு காரணம் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியதே… இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு அரபிக்கடலில் மார்ச் மாதத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதே.. ஏனெனில் கடந்த ஆண்டுகளில் மார்ச் மாதத்திலே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது.. அதேபோல தமிழகம் அதீத நேரங்களில் வங்கக்கடலில் இருந்தே மழை பெறும்..


Advertisement

ஆனால் கடந்த ஆண்டு தென் தமிழகத்தில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்தது. ஒகி புயலில் கோரத்தாண்டவத்தில் தெந்தமிழகம் ஆடிப்போனது.. 2015 2016 ஆகிய ஆண்டுகளில் நாம் வங்க்கடல் மூலமாகவே மழை பெற்றோம்… இது கடந்த ஆண்டு மாறிய நிலையில் தற்போது மற்றுமொரு மழையை சந்தித்திருக்கிறோம்.

சரி.. தற்போதுள்ள தாழ்வு மண்டலம் புயலாக மாறும்.. தென் தமிழகத்தை தாக்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.. ஆனால் தமிழகத்தை தாக்க வாய்ப்பில்லை என்கின்றனர் வானியல் வல்லுநர்கள்.. ஏனெனில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.. அதனால் தமிழகம் மழை பெறுமே தவிர புயல் நேரடியாக தாக்கவோ அல்லது ஒகியை போன்றதொரு பாதிப்பு ஏற்படவோ வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது…


Advertisement

ஆயினும் கூட மீனவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. புயல் தமிழகத்தை நேரடியாக தாக்காதே தவிர அரபிக்கடலை மையம் கொண்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வடதமிழகத்தில் மழைக்குவாய்ப்பு குறைவே, இருப்பினும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புண்டு..
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close