இந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2018 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது,
டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், மெக்கானிக்கல், சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் பிரிவுகளில் பணிகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.18000/- (LEVEL 1 OF 7TH CPC PAY MATRIX)
விண்ணப்பிப்பது எப்படி?
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 (Refundable). விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்திற்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
3. பின்னர், Login id, பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்கவும்.
4. செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள்உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி: 30.3.2018
மேலும் விவரங்களுக்கு: http://www.rrbahmedabad.gov.in/images/Corrigendum_CEN_02_2018.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!