[X] Close >

பழி தீர்க்குமா? இந்தியா- இலங்கை இன்று மீண்டும் மோதல்!

India-Look-To-Avenge-Opening-Match-Defeat-To-Sri-Lanka

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணி, முந்தைய தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது.


Advertisement

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி, தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி, இலங்கை நிர்ணயித்த 215 ரன்களை சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது. மூன்று அணிகளும் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்று சமநிலை வகிப்பதால் இந்த தொடர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.


Advertisement

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்திய தரப்பில், ரோகித் சர்மா ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது. அவர் கடைசியாக விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில் 21, 0, 11, 0, 17 என ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிக ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணி எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

இலங்கை அணி பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறது. குசல் பெரேரா தொடர்ச்சியாக அதிரடி காட்டி வருகிறார். பங்களாதேஷூடன் நடந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், இலங்கை கேப்டன் சண்டிமால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதனால் இன்றைய போட்டியில் அவர் ஆடமாட்டார். 
இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Tags : Sri Lankacricketindiarohit sharma
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close