மூன்று வருடத்துக்கு பிறகு டிவில்லியர்ஸ் அடித்த சதம் காரணமாக, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தென்னாப்பிரிக்க அணி, டிவில்லியர்ஸின் அபார ஆட்டம் காரணமாக 382 ரன்கள் குவித்தது.
டிவில்லியர்ஸ் 126 ரன்கள் எடுத்தார். இது அவரது 22-வது டெஸ்ட் சதம். மூன்று வருடத்துக்கு பிறகு அவர் அடித்த டெஸ்ட் சதம் இது. அதோடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 6-வது சதம். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க அணியின் துல்லியமான பந்துவீச்சில் திணறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.
கவாஜா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய அணி இதுவரை 41 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி