ஜடேஜா வெளியே.. அஸ்வின் உள்ளே..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஈரானி கோப்பை கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ரவிசந்திர அஸ்வின் விளையாடவுள்ளார். 


Advertisement

இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஜடேஜாவும், அஸ்வினும் விளையாடி வருகிறார்கள். சாஹல், குல்தீப் சிறப்பாக விளையாடி வருவதால், ஜடேஜா-அஸ்வினுக்கு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சமீப காலமாக வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், இந்திய ஏ அணிக்களுக்கான போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதேபோன்று ஈரானி கோப்பை போட்டியில், ரஞ்சி கோப்பை சாம்பியன்களான விதர்பாவை கருண் நாயர் தலைமையிலான  ரெஸ்ட் ஆப் இந்தியா அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மார்ச் 14-ம் தேதி தொடங்கி 18 வரை நடைபெறுகிறது. 


Advertisement

ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில், கருண் நாயர் (கேப்டன்), பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ஆர். சமர்த், மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கே.எஸ். பாரத் (விக்கேட்கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஷாபாஸ் நதீம், அன்மோல்பிரீத் சிங், சித்தார்த் கவுல், அன்கித் ராஜ்பூட், நவதீப் சைனி, அதித் ஷெத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

இந்நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜடேஜா பக்க எலும்பு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவருக்கு பதிலாக அஸ்வின் விளையாடுகிறார். அஸ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த தியோதர் கோப்பை போட்டியிலும் விளையாடவில்லை. ஒரு வாரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். தற்போது, உடல் நிலை தேறிவிட்டதால், விளையாடத் தகுதி பெற்றுவிட்டதாக மருத்துவ ஆலோசர்கள் கூறினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement