இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராமேஸ்வரம் மீனவரை சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை மீது மண்டபம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Advertisement

இந்திய கடற்பகுதியில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவரின் உடலை வாங்காமல், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், மீனவரை கடலில் சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரிட்ஜோவுடன் சென்ற அருள் கிளிண்டன் என்ற மீனவரின் புகாரை ஏற்று கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement