வைபை-யை துண்டித்ததால், வைஃபை சரமாரியாக தாக்கிய கணவர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வைபை இணைப்பை துண்டித்த மனைவியை கண்மூடித்தனமாக கணவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் ரேஷ்மா சுல்தானா என்ற பெண், நேற்றிரவு தூங்கும் போது வைபை சேவையை நிறுத்துமாறு தனது கணவரிடம் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுல்தானா, வைபை இணைப்பில் சுவிட்சை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், சுல்தானாவை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில், சுல்தானாவின் முகம், தலை மற்றும் மார்பகப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுல்தானாவின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சுல்தானாவின் கணவரை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிந்துள்ளனர். சுல்தானாவும், அவரது கணவரும் மண வாழ்க்கையை முறித்துக்கொள்ள நினைத்து, தற்போது பெரியவர்களின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சேர்ந்த வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement