ஆதரவற்ற முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜான்வி கபூர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்மையில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இன்று தனது 21வது பிறந்தநாளை கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் கொண்டாடினார்.


Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவான திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா பிரபலங்கள், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இன்று தனது 21-வது பிறந்தநாளை கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடினார். முதியோர்கள் அனைவரும் ஜான்வி கபூரை வாழ்த்தி பாட மெய் மறந்துப்போன ஜான்வி கபூரும் மகிழ்ச்சியில் கை தட்டுகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் ஜான்வி தனது இன்ஸ்ட்கிராம் பதிவில், பெற்றோர்களை நேசியுங்கள் என ரசிகர்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டிருந்தார். பெற்றோர்கள்தான் நம்மை உருவாக்கியவர்கள் என உணர்ச்சிப்பூர்வமாக அந்த பதிவில் ஜான்வி கபூர் குறிப்பிட்டிருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement