[X] Close >

புதிய பொறுப்புகள் தேவையில்லை: நாஞ்சில் சம்பத்

No-Need-New-Post-say-Nanjil-Sampath

அதிமுக-வில் புதிய பொறுப்புகள் ஏதும் தேவையில்லை என நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறைக்கு இன்று அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக கூறினார் நாஞ்சில் சம்பத்.

தன்னுடைய பேச்சும், இயக்கப் பணியும் அதிமுகவிற்கு தேவைப்படுவதாகவும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சசிகலாவை சந்திக்குமாறும் தொண்டர்கள் வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். சசிகலாவைச் சந்தித்த போது அவர் மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாகவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.


Advertisement

சசிகலாவை விமர்ச்சித்து ஏற்கனவே கடுமையாக கடிதம் எழுதிய பின்பும் கூட தற்போது ஏற்றுக் கொண்டார்கள் எனவும் ஜனநாயக பண்பின் உச்சம் அவரிடம் இருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சசிகலா தலைமையில் சுதந்திரம் கிடைப்பதை உணர்வதாக கூறியுள்ள அவர், சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் பதவியேற்ற பின், ஜல்லிக்கட்டு தொடர்பாக சசிகலா விடுத்த அறிக்கை எதிரிகளை நிலைகுலைய வைத்துள்ளது எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


Advertisement

ஜெயலலிதாவை காட்டிலும் தீவிரமாக உழைக்க உடல் வலிமையும், உள்ளத்தில் உற்சாகமும் சசிகலாவிடம் இருப்பதால், அதிமுக புதிய பொலிவுடன் வரும் என்பதை சசிகலா நிரூபிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா தனக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கியதாகவும் அதன்பின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பு கொடுத்ததாகவும் தெரிவித்த நாஞ்சில் சம்பத், தற்போது, அதிமுக-வில் புதிய பொறுப்புகள் ஏதும் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close