நீலகிரியில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்

Flowers-rose-in-Nilgiris

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் சீசனை ஒட்டி ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.


Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் ஆண்டுதோறும் களைகட்டும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியையும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியையும் நடத்துகிறது. இம்முறை பல வண்ண ரகங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன. இந்த மலர் செடிகளில் தற்போது ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. வார விடுமுறை நாட்களில் உதகை வரும் சுற்றுலா பயணிகளை இவை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement