ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ஆனார் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

பதினோறாவது ஐ.பி.எல் திருவிழா, அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் ஜனவரி மாதம் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக்கை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ராபின் உத்தப்பா அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. 


Advertisement

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூர், டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளில் விளையாடியுள்ளார்.

ராபின் உத்தப்பா, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியின் கேப்டனாக கவுதம் காம்பிர் இருந்தார். அவர் இந்த வருட ஐபிஎல்-லில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.

ஏற்கனவே தமிழக வீரர் அஸ்வின், பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement