சேலத்தில் ரவுடிக்கு கேக் ஊட்டிய விவகாரத்தில் கன்னங்குறிச்சி தலைமை காவலர் ஏழுமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் கருணாகரன். கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுசீந்திரகுமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளில் தண்டனை பெற்றவர். சுசிந்திரகுமாரின் பிறந்தநாள் விழாவில் கருணாகரன் கலந்து கொண்டதோடு, அவருக்கு கேக் ஊட்டி விட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விசாரித்த சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், ஆய்வாளர் கருணாகரனை இடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.துறை ரீதியான விசாரணை முழுமையடைந்த பிறகு, ஆய்வாளர் கருணாகரன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதே விவகாரத்தில் கன்னங்குறிச்சி தலைமை காவலர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்து சேலம் காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!