ஆசிரியர் தகுதித் தேர்வு அக். 6, 7ல் நடைபெறும்

TN-Teacher-Eligibility-Test-announced--The-exams-on-October-6-and-7

அக்டோபர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,


Advertisement

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 6 மற்றும் 7ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்தாள் தேர்வு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு அக்டோபர் 7ம் தேதியும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. முடிவுகள் நவம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற விரிவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை அரசு ரத்து செய்திருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திருந்த நிலையில், விரிவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement