9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மாநிலம் நரெலா நகரத்தை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் விசாரித்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கல்வி பயிற்சி மையத்தின் ஆசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை, அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கல்வி பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஷாகீர் ஹுசைன் என்பவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, யாரிடம் கூறக்கூடாது என்று அவர் மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியை கைது செய்த போலீஸார், அவர்மீது குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது அந்த சிறுமிக்கு அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!