ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகின்றது.
துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், மும்பை க்ரின் ஏக்கர்ஸ் இல்லத்தில் வைக்கப்பட்டது. இதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர், இறுதியஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.
ஸ்ரீதேவியின் உடல் போனி கபூருக்குச் சொந்தமான செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் காலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொது மக்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து 3 நாட்களாக அவரது இல்லத்தின் முன் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் விஐபிக்களும் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் 3 மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. பவன் ஹன்ஸ் பகுதி வரை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. கபூர் குடும்ப வழக்கத்தின்படி சேலை, பாரம்பரிய தங்க ஆபரணங்கள் மாலை அலங்காரத்துடன் ஸ்ரீதேவியின் பூத உடலை தாங்கி செல்லும் வாகனத்தை காண சாலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். பிற்பகல் 4.30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி