குளங்களை காணவில்லை: ஆட்சியர் பகீர் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவண்ணாமலையில் 100-க்கும் மேற்பட்ட குளங்களை காணவில்லை என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியுள்ளார்.


Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலகப்புகழ்பெற்றது. இந்தக கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். அதேபோல், ஒவ்வொரு மாதம் பெளர்ணமியின் போது கிரிவலத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளாமானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு 14 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரிவலப் பாதை உள்ளது. 

இந்த கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்வதற்கான முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த கிரிவலப் பாதையில் இருந்த 100 குளங்கள் மாயமாகியுள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குளங்களை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். விரிவாக்க பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்ட போது, கிரிவலப் பாதையில் இருந்த 360 குளங்களில் 100 குளங்களைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.


Advertisement

 இன்னும் ஒரு வாரத்தில் வருவாய் துறையுடன் சேர்ந்து காணாமல் போன குளங்களை கண்டறிந்து மீட்டெடுக்கும் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement