ஹாலிவுட் படத்தைவிட குறைவான செலவில் சந்திராயன்2

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சந்திராயன்-2 திட்டத்திற்கு, ஹாலிவுட் படம் எடுத்ததற்கான செலவை விட குறைவுதான் என்ற ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

நிலவை ஆராய்ச்சி செய்வதற்கான சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அதனையடுத்து, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சந்திராயன் 2 திட்டம் வரும் ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-1 விண்கலத்தைப் போல் அல்லாமல், சந்திராயன்2 திட்டத்தை பொறுத்தவரை விண்கலம், ஆய்வூர்தி மற்றும் ஆய்வூர்தியை இயக்குவதற்கான லேண்டர் ஆகிய மூன்றும் அனுப்பப்பட உள்ளன. இவற்றின் மொத்த எடை 3,290 கிலோ ஆகும்.

சந்திரயான்-2 திட்டத்திற்கான செலவு மொத்தமே 800 கோடி ரூபாய். ஆனால், இண்டர்ஸ்டெல்லார் என்ற ஹாலிவுட் திரைப்படம் எடுப்பதற்கு  ஆயிரத்து 65 கோடி ரூபாய் செலவாகியுள்ள நிலையில், அதனைவிட குறைவான செலவில் சந்திராயன் 2 தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முடிந்தவரை எளிமைப்படுத்தி திட்டத்தை செயல்படுத்தி வருவதால், பொருட்கள் வீணாவது மற்றும் தேவையற்ற செலவு தவிர்க்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 


Advertisement

         

முன்னதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆளில்லா விண்கலம் மங்கள்யான். அப்போது, மங்கள்யான் விண்கலத்துக்கு ஆன செலவு 2014ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘கிராவிட்டி’ எடுப்பதற்கு ஆன செலவைவிட குறைவு என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement