ரஹ்மான் இசையில் அமலா பால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமலா பால் நடிக்க உள்ள திரைபடத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.


Advertisement

அமலா பால் தற்போது மலையாளத்தில் நல்ல பிசி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.  இயக்குநர் ப்ளெஸ்சி இயக்கத்தில் உருவாக உள்ள ‘ஆடுஜீவிதம்’படத்தில் அமலா பால் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் ரசூல் பூக்குட்டி, கே.யு. மோகனன் உள்ளிட்டவர்கள் பணிபுரிய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3டி வடிவில் படத்தை தயாரிக்க உள்ளனர் என்பது சிறப்பான செய்தி.

இதில் அமலா உடன் ப்ரித்விராஜ் நடிக்க உள்ளார். இவரது கால் ஷீட்டுக்காக கடந்த இரண்டு வருடமாக இப்படம் தேங்கிக்கிடந்தது. ஒட்டுமொத்தமாக இப்போது 2 ஆண்டுகளை ப்ரித்வி ஒதுக்கியுள்ளார். மேலும் 25 ஆண்டுகளுக்குப் பின் மலையாள கரைப்பக்கம் திரும்பி இருக்கிறார் ரஹ்மான். ஆகவே அமர்க்களமான கூட்டணியாக இதனை மலையாள திரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம். இதே பெயரில் அந்நாவலை எழுதியவர் பென்யாமின். இந்நாவல் தமிழில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றது.

loading...

Advertisement

Advertisement

Advertisement