[X] Close >

அரசியல் களத்தில் காகிதப் பூ மணக்காது: ஸ்டாலின் சீற்றம்

DMK-Working-President-MKStalin-Statement

தமிழக அரசியல் களத்தில் காகிதப் பூக்கள் மணக்காது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதிய கட்சிகள் தொடங்கவுள்ள நிலையில் ஸ்டாலினின் இந்தக் கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


Advertisement

திமுகவினருக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, திமுக எனும் பேரியக்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என கூறியுள்ளார். பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமாக காகிதப் பூக்கள் மலரலாம் என்று கூறியுள்ள ஸ்டாலின், ஆனால் அந்தக் காகிதப் பூக்கள் மணக்காது என்று தெரிவித்துள்ளார். திமுக என்பது திராவிட மொழிப் பெருமைக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து பயிர் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சிகள் தொடங்கும் ரஜினியும், கமலும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஏற்கனவே வாழ்த்துப் பெற்றிருந்தனர். இந்தச் சூழலில் கவர்ச்சிப் பூக்கள் மணக்காது என அவர் கருத்துக் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close