கடன் மோசடி விவகாரம்: பஞ்சாப் வங்கி கிளைக்கு சீல்

CBI-sealed-Punjab-National-Banks-s-MCB-Brady-House-branch-in-Mumbai

 


Advertisement

தொழிலதிபர் நிரவ் மோடி மோசடியாக கடன் பெற உதவியதாகக் கூறப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் இந்திய அளவில் பூதாகரமாகியுள்ள நிலையில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. பாட்னா, ஜெய்பூர், துர்காபூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை ஐந்தாயிரத்து 674 கோடிக்கும் அதிகமான தங்க-வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

இதனிடையே பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் வங்கி ஊழியர் மனோஜ் காரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், நிரவ் மோடி குழும நிறுவனங்களின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஹேமந்த் பத் என்பவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மோசடி என வர்ணித்த நீதிபதி எஸ்.ஆர்.தம்போலி, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 14 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகள், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டில் சுமார் 300 உத்தரவாத கடிதங்களை அளித்ததன் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் எம்சிபி பிராடி ஹவுஸ் பகுதியில் உள்ள கிளை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விரிவான சோதனை நடத்தியிருந்தனர். வங்கி அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தவிர கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கோகுல்நாத் ஷெட்டியிடமும் மனோஜ் காரத்திடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வங்கிக் கிளையில் இருந்த சில அதிகாரிகள் கொடுத்த கடன் உத்தரவாத கடிதத்தை பயன்படுத்திதான் நிரவ் மோடி 11 ஆயிரத்து 4‌00 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளார். இதனையடுத்து மும்பையில் எம்சிபி பிராடி ஹவுஸ் பகுதியில் உள்ள  பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 


Advertisement

இதற்கிடையில் 11 ஆயிரத்து 40‌0 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement