பாஜக - அதிமுக இடையே அரசியல் ரீதியான உறவு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராஜேந்திர பாலாஜி, “ஆவின் நிர்வாகத்தை பலர் அழிக்க நினைத்தனர். நிறுவனத்தை காப்பாற்றியது பால் உற்பத்தியாளர்களாகிய நீங்கள்தான். தற்போது சிங்கப்பூரிலும் ஆவின் பால் விற்பனையாகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல போராட்டங்களை சமாளித்து திறம்பட ஆட்சி நடத்தி வருகிறார்” என்றார்.
பின்னர் செய்தியாளர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசாங்க, நிர்வாக ரீதியாக தான் பிரதமர் கூறியதை கேட்டோம். அரசியல் ரீதியாக இல்லை. எஞ்சிய 3 அரை ஆண்டுகளும் அதிமுக நிலைத்து ஆளும். இரட்டை இலை வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. துணை முதல்வர் பேசியது யதார்த்தமானது. அதை அரசியலாக்க வேண்டாம்” என்று கூறினார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!