ஸ்ரீரங்கம் கோவிலில் 15 கடைகளுக்கு சீல்

Notice-Issue-15-shops-at-Srirangam-temple

 


Advertisement

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகங்களில் இருந்த 15 கடைகளை கோயில் நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது.

புனரமைப்பு பணிக்கு சிரமம் ஏற்படுவதாகக் கூறி கடைகளை அப்புறப்படுத்த கோயில் நிர்வாகம் 15 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் கடைகளை அப்புறப்படுத்தாமல் கடைக்காரர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளில் தீவிபத்து ஏற்பட்டு கோயிலின் சில பகுதிகளில் சேதமடைந்ததை தொடர்ந்து, ரங்கநாதர் கோயில் வளாகங்களில் இருந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் கடைக்காரர்கள் காலதாமதம் செய்ததால் வடக்கு, தெற்கு, மேல வாசல் மற்றும் கீழ வாசல் கோபுரங்களில் உள்ள 18 கடைகளில் 15 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள 3 கடைகள் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால் அதற்கு சீல் வைக்கப்பட வில்லை.


Advertisement
Related Tags : Trichy
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement