பேட்மேனுக்கு ராஜஸ்தானில் வரிவிலக்கு 

PadMan-won-t-be-taxing-in-Rajasthan

 


Advertisement

அக்‌ஷய் குமார் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள பேட்மேன் படத்திற்கு ராஜஸ்தானில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளும் அதற்கான விழிப்புணர்வு குறித்து பேட்மேன் திரைப்படம் பேசுவதால் ராஜஸ்தான் மாநிலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பேட்மேன் படத்தை ஏராளமான பெண்கள் காண வேண்டும். இதன்மூலம் சுகாதார நாப்கின்களை பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவும் எனத் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கிராமப் புறப்பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதார நாப்கின் இயந்திரத்தை வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.


Advertisement

அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள பேட்மேன் திரைப்படத்தை தமிழரான ஆர்.பால்கி இயக்கியுள்ளார். பெண்களுக்காக ஆரோக்கியமான நாப்கினை குறைந்த செலவில் தயாரித்த தமிழகத்தின் கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement