பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வழிப்பறி போன்ற சம்பவங்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நாவலூரில் ஐடி பெண் ஊழியர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டது, சென்னை காவல்துறைக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என கூறியுள்ளார். 2014ம் ஆண்டு சிறுசேரியில் மென்பொறியாளர் உமா மகேஸ்வரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், காவல்துறையில் இரவு ரோந்து உள்ளிட்ட குற்றத்தடுப்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கும் அதிமுக ஆட்சியில் காவல்துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
நாவலூரில் ஐடி பெண் ஊழியர் தாக்கப்பட்ட சம்வத்தில், குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ஐ.டி நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 24 மணி நேர ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், ஐடி நிறுவன பகுதிகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகளை வேறுபகுதிகளின் பந்தோபஸ்து பணிக்கு அழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்