மகளை பாலியல் கொடுமை செய்த தந்தை கைது!

Father-Sexual-Harassment-to-Daughter-in-Kanyakumari

கன்னியாகுமரியில் மூன்றரை வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார். 


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள சீரோபாயிண்ட் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன். இவர் வேலைக்குச் செல்லும்போது தனது மூன்றரை வயது மகளையும் அழைத்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில், அந்தச் சிறுமி தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தாயிடம் கூறியதையடுத்து, அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ‌சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரித்ததில் சிறுமியின் தந்தையே பாலியல் தொந்தரவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement