இன்று 5-வது ஒரு நாள் போட்டி: சாதனை வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னாப்பிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியை ஈட்டும் முனைப்புடன் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. 


Advertisement

தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் 3 போட்டிகளில் வென்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோற்றது. ஐந்தாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. 

போர்ட் எலிசெபத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இந்த மைதானம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் சேஹல், குல்தீப் ஆகியோர் இங்கும் கலக்குவார்கள்.


Advertisement

இந்திய அணியில், ஷிகர் தவான், கோலி ஆகியோர் சிறப்பாக ஆடி வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த 4 ஆட்டங்களில் மொத்தம் 40 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் நிலைத்து நின்று ஆடினால், இந்திய அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காத கேதர் ஜாதவ் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. 

தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இருக்கிறது. கடந்த போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. டிவில்லியர்ஸ் அணிக்குத் திரும்பியிருப்பதும் அவர்களுக்கு கூடுதல் பலம். அதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற அவர்களும் கடுமையாக போராடுவார்கள்.

தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய சாதனையை நிகழ்த்தும். 


Advertisement


 

loading...

Advertisement

Advertisement

Advertisement