தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் இன்று அதிகாலையும் மழை பெய்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தேவாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று காலை லேசான மழை பெய்தது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. இதே போன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் லேசான மழை பெய்தது. மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement